Categories
மாநில செய்திகள்

“ஒன்றாக வந்தால் வாருங்கள் இல்லன்னா வராதீங்கள்”…. மோடியை சந்தித்த ஓபிஎஸ்-இபிஎஸ்…. நடந்தது என்ன?…..!!!!

நேற்று தமிழகம் வந்த மோடியை சந்திப்பதற்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது. எனினும் இருவரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்டாக அரசியல் பற்றி பிரதமர் அவர்களிடம் பேசவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் அமித்ஷா பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். அப்போது ஓபிஎஸ்-ஐ பார்த்த அமித்ஷா கைகுலுக்கலோடு நிறுத்திக் கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை தனிப்பட்ட முறையில் அமித்ஷா சந்திப்பார் என்று நினைத்த சூழலில், அவர் பாஜக அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்று விட்டார். இதன் காரணமாக ஓபிஎஸ் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. டெல்லி மேலிடத்திடம் கட்சி நிலவரம் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பேச முயற்சித்து வரும் நிலையில், அவர்களிடம் அதிமுக விவகாரம் பற்றி மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து பேசாததற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஏனெனில் இருவரும் ஒன்றாக இருந்தால் தான் தேர்தலில் லாபத்தை அறுவடைசெய்ய முடியும் என பாஜக நினைக்கிறது. இருவரில் ஒருவர் தனியாக சென்றாலும் அது வீண் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக நம்புகிறது. ஆகவே இருவரும் ஒன்றாக வந்தால் வாருங்கள் இல்லையெனில் வராதீங்கள் என்பதைத் தான் இருவரும் சூசகமாக நேற்றும், இன்றும் உணர்த்திவிட்டு சென்றிருக்கின்றனர் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |