Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி இது தாராளமாக கிடைக்கும்…. வெளியான அசத்தல் தகவல்….!!!

தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அரசி, சக்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பல்வேறு நல திட்ட உதவிகள் பெற இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் அரசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மட்டுமே நம்பியுள்ள நிலையில் இவற்றில் புழு, பூச்சிகள் என கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் எந்த கட்சி மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் ரேஷன் பொருட்களில் மட்டுமே எந்தவிதமாற்றம் வருவது இல்லை என்பது தான் பொதுமக்களின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்நிலையில் தான் இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டாம் அமல் படுத்தப்பட்டது.

இதன் மூலம் தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்ட அமலுக்கு வந்தது. ஒருவேளை முகவரி மாறி வேறு இடத்துக்கு சென்றாலும் கார்டில் முகவரி மாற்றம் செய்யாமல் புதிய இடத்தில் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாகவும், மாதத்தின் கடைசி நாளில் மட்டுமே பொருட்கள் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து கூட்டுறவு துறைக்கு புகார்கள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் குறித்து கண்காணிக்கவும், பொருட்கள் தடையில்லாமல் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் கூட்டுறவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரேஷன் பொருட்களை வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Categories

Tech |