Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…வீண் குழப்பம் விலகி செல்லும்..செல்வ நிலை சீராகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே,,! இன்றும் உங்களுடைய செல்வ நிலை சீராக இருக்கும், அரசால் ஆதாயம் உங்களுக்கு ஏற்படும். உங்களுடைய சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். பலகைகளில் உங்களுக்கு உங்களுடைய மனைவி இன்று உதவி உதவிகள் செய்வார்கள். மனதிலிருந்து வீண் குழப்பம் விலகிச்செல்லும். சிலர் உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி செல்ல வரக்கூடும். மாணவச் செல்வங்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை கொடுக்கும். மாணவரிடம் கொஞ்சம் நட்புடன் பழகுவது சிறப்பு.

தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள், உங்களுடைய மனநிலையை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழ வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.மனதை ஒருநிலைப்படுத்த இரண்டு நிமிடம் தியானத்தை மேற்கொள்ளுங்கள். மேற்கொண்டு பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. இன்று கணவன் மனைவியிடையே அன்பு இருக்கும்.

கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். வெளி வட்டாரப் பகுதிகளில் மதிக்க கூடிய சூழலில் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல்  இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு, காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |