கேரள மாநிலம் சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சபரிமலையில் அய்யப்பன் தரிசனத்துக்கு ஆன்லைன் வாயிலாக முன் பதிவு அவசியம் என தேவசம்போர்டு அறிவித்து உள்ளது. அதன்பின் பதிவுசெய்யாமல் வரும் பக்தர்களுக்கு குமுளி, 66ம் மைல், பந்தளம், எருமேலி, நிலக்கல் உள்ளிட்ட 5 இடங்களில் ஸ்பாட்புக்கிங் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு போன்றவைகளை மட்டும் எடுத்துவந்தால் போதுமானது என தேவசம்போர்டு அறிவித்து உள்ளது.