ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.
அவர் கடந்த 2011ம் ஆண்டு காலமான நிலையில், அவர் பயன்படுத்திய காலணி தற்போது ஏலத்திற்கு வருகிறது. இந்த காலணியின் ஏலத்தொகை ரூ.48 லட்சத்தில் இருந்து ரூ.64 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இந்த ஏலம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.