இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து தப்பிப்பதற்கு அவ்வப்போது அறிவுரைகளை அரசு சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது தமிழகத்தில் போலி வங்கிகளை நடத்தி நகை கடன், விவசாய கடன் வழங்குவதாக ஏழை எளிய மக்களை குறிவைத்து மோசடிகள் நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக இந்த மோசடிகள் ஸ்மார்ட்ஃபான்கள் மூலமாக நடப்பதாகவும் பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பதற்கு வங்கிகளின் நம்பகத்தன்மை அறிய வங்கிகளின் இணையதளங்களில் கிளைகளில் லொகேஷன் வசதியை குறிப்பிட்டு உண்மையை தெரிந்து கொள்ளலாம். மெசேஜ் இமெயிலில் வரும் வங்கி தொடர்பான செய்திகள் நம்ப வேண்டாம். ஏற்கனவே வழக்கமாக செல்லும் வங்கி கிளைகளுக்கு சென்று புதிய வங்கி குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.