Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் சர்தார் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு….‌ செம உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி முதல் படத்திலேயே தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அதன்பின் தான் நடித்த பல திரைப்படங்கள் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்தார் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே வில்லனாக நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகைகள் ராசி கண்ணா, லைலா, ரெஜிஷா விஜயா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ் மற்றும் முரளி சர்மா போன்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சர்தார் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‌ அதன்படி ஆகா ஓடிடி தளத்தில் நவம்பர் 18-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த தகவலை ஆகா ஓடிடி நிறுவனம் அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பாளர் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |