குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து செல்லும் போலீசார் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். தமிழக காவல்துறையில் புதியதாக இ-பீட் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இந்த புதிய முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் 7 போலீஸ் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது.
இந்த செயலியை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உங்களின் செல்போனில் பதிவேற்றம் செய்து அதன் செயல்பாட்டை கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த செல்போன் செயலி மூலமாக கெட்ட நடத்தைகாரர்கள், வரலாற்று பதிவேடு குற்றவாளிகள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் உள்ளிட்டவர்களின் நடவடிக்கைகளை இதன் மூலமாக கண்காணிக்க முடியும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது ஸ்மார்ட் காவலர் என்ற இந்த செல்போன் செயலி மூலமாக தனது ரோந்து பகுதியில் இருக்கும் ஏடிஎம் மையம், வங்கி, பூட்டிய வீடுகள், பிற முக்கிய பகுதிகளுக்கு சென்று தணிக்கை செய்யும்போது அதன் விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவேற்றலாம்.