Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024…. களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பதவி காலம் முடிந்த பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புதிதாக உருவான 9 மாவட்டங்கள் நீங்களாக பிற மாவட்டங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சி என்று அனைத்து நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற முடிந்தது. இந்த தேர்தலில் தமிழக முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் முக்கியமான பதவிகளை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 2024-ஆம் தேதி ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் அடுத்த இரண்டு மாதத்திற்கு உள்ளாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று திமுக தலைமை சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாக்கு சாவடி முகவர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |