தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் கூறியுள்ளது.
முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது, வரும் 16 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.