கொரானாவால் இறப்பு எண்ணிக்கை 92 எட்டியுள்ள நிலையில் 54000 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
கொரானா வைரசால் நாடு முழுவதும் 3200-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். மேலும் 92000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 92 யை தாண்டியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் முதல் துணை ஜனாதிபதி கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இஸ்லாமியர்களின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கொரானா மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 54000 சிறைக் கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவதாக ஈரான் நீதித்துறை அறிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.