Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்… கடந்த 5 ஆண்டுகளில் செலவு எவ்வளவு தெரியுமா?

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ .446 கோடிக்கு மேல் செலவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை  இணையமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ 446. 52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Image result for Prime Minister Modi's overseas trip have cost the government over Rs 446 crore over the past five years.

ஆண்டு வாரியாக பயண செலவு :

2015-16-ம் ஆண்டு – 121 கோடியே 85 லட்சம்,

2016-17-ம் ஆண்டு –  78 கோடியே 52 லட்சம்,

2017-18-ம் ஆண்டு – 99 கோடியே 90 லட்சம்

2018-19-ம் ஆண்டு  – சுமார் 100 கோடி,

2019-20-ம் ஆண்டு – 46 கோடியே 23 லட்சம்

ஆண்டு வாரியாக  பிரதமர் மோடியின் பயணத்திற்காக இத்தனை கோடி செலவிடப்பட்டுள்ளது என்று முரளிதரன்  குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |