Categories
அரசியல்

குழந்தைகள் தின விழா…. இவங்களுக்கு பிடிச்ச மாதிரி எப்படி கொண்டாடனும் பாருங்க….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. இந்த தினத்தை குழந்தைகளுக்குப் பிடித்தமான முறையில் எப்படி கொண்டாட வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன் படி வீட்டில் ஒரு பாட்டியை ஏற்பாடு செய்து அதில் குழந்தைகளுக்கான பேன்சி டிரஸ் காம்பெடிஷன் மற்றும் அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகள் சாப்பிடுவது போன்றவற்றை மையமாகக் கொண்டு சில ஏற்பாடுகளை செய்யலாம். அந்த வகையில் இந்த நாளை கொண்டாடுவதற்கான சில வேடிக்கையான விஷயங்கள் குறித்து இப்போது நாம் பார்க்கலாம். குழந்தைகளுக்குப் பிடித்த இடமான பூங்காக்கள் கூட்டிச் செல்வது ஐஸ் கிரீம், சாண்ட்விச் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பது அவர்களை அன்பாகவும் அரவணைப்பாகவும் கவனித்துக் கொள்வது போன்றவை செய்யலாம்.

இதனை அடுத்து அவரவர் வீடுகளிலேயே குழந்தைகளுக்கு நடன விருந்து ஏற்பாடு செய்து குழந்தைகளை மகிழ்விக்க செய்யலாம் இதனையும் தாண்டி சில குழந்தைகளுக்கு கேம்மிங் கதைகளை கேட்பது பிடித்திருக்கும். அவர்களுக்கு ஏற்றவாறு கதைகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைகளை மகிழ்விக்க செய்யலாம். மேலும் சில குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியுடன் இருப்பதும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். குறிப்பாக சிலரது வீட்டில் தாத்தா பாட்டி இல்லை என்றால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை முதியோர் இல்லங்களுக்கு கூட்டிச்சென்று முதியோர்களுடன் விளையாடச் செய்து அவர்களை மகிழ்விக்கலாம். மேலும் ஓவியம் வரைதல், பீட்சா பார்ட்டி போன்றவற்றை ஏற்பாடு செய்தும் அவர்களை இன்பமுற செய்யலாம்.

Categories

Tech |