Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு மாதம் ரூ.3,000?…. EPFO பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது, அதன் ஓய்வூதியத் திட்டத்தின் வரம்பை (கவரேஜ்) அதிகரிக்கக் கூடும். இந்த புது திட்டம் தனிப்பட்ட பங்களிப்பை அடிப்படையாக கொண்டதாகும். இது ஒவ்வொரு பணியாளருக்கும் 60 வயதுக்குப் பின் குறைந்தபட்சம் மாதம் ரூபாய் 3,000 ஓய்வூதியம் பெறுவதை உறுதிசெய்கிறது. இந்த முன் மொழியப்பட்ட திட்டம் யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் என பெயரிடப்படலாம். தற்போது இருக்கும் ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டம் (இபிஎஸ்), 1995ன் பல சவால்களை எதிர்கொள்வதை இந்த புது திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

மாதம் ரூபாய்.15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு கவரேஜ் கிடையாது. ஒரு எளிய ஓய்வூதியத்தொகை மட்டுமே இருக்கிறது. இதற்கிடையில் புது திட்டத்தில் விதவைகளுக்கான ஓய்வூதியம், குழந்தைகளுக்கான ஓய்வூதியம், ஊனமுற்றோர்களுக்கான ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும். எனினும் இந்த ஓய்வூதிய பலன்களுக்கான குறைந்தபட்சம் தகுதிச்சேவை காலம் 10ல் இருந்து 15 வருடங்களாக அதிகரிக்கப்படும்.

இதனிடையில் உறுப்பினர் ஒருவர் 60 வயதிற்குள் இறந்தால், அக்குடும்பத்திற்கு யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். மாதந்தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம் பெற, இத்தொகையை ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 3,000 ஆக டெபாசிட் செய்யவேண்டும். மொத்தமாக ரூபாய் 5.4லட்சம் டெபாசிட் செய்யவும். இபிஎப்ஓ-ன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அமைத்த குழு, இபிஎப்ஓ ​​உறுப்பினர்கள் தானாக முன் வந்து அதிக பங்களிப்பைத் தேர்வு செய்து அதிக ஓய்வூதியத்திற்காக அதிக தொகையை டெபாசிட் செய்யலாம் என கூறியது.

இப்போது ​​20தொழிலாளிகளுக்கு மேலுள்ள நிறுவனங்களில் மாதம் ரூபாய்.15,000 வரையிலும் சம்பளம் பெறுபவர்களுக்கு இபிஎப் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொழிலாளரும் தன் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீத இபிஎப் திட்டத்தில் கொடுக்கிறார்கள். இபிஎப்-க்கு பங்களிக்கும் அனைவருக்கும் இபிஎஸ் கட்டாயம் ஆகும். முதலாளி, நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவீத ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. இது மாதத்துக்கு ரூபாய்.15,000 சம்பள உச்சவரம்பின் அடிப்படையில் மாதத்திற்கு ரூ.1,250 உச்சவரம்புக்கு உட்பட்டது

Categories

Tech |