குஜராத் தொங்கு பால விபத்திற்கு அதானி தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரீத்தி அதானி வேதனை தெரிவித்துள்ளார்.
குஜராத் தொங்கு பால விபத்தில் 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நன்கொடை அளிக்க அதானி தொண்டு நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த வகையில் வெளியான அதிகாரப்பூர்வ ஆவண தகவலின் படி, பெற்றோர் 2 பேரையும் இழந்த குழந்தைகள் 7 எனவும், ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 12 எனவும் தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் கணவரை இழந்த கர்ப்பிணியின் இன்னும் பிறக்காத குழந்தை என மொத்தம் 20 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க அதானி தொண்டு நிறுவனம் முன் வந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. மேலும் அதானி தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரீத்தி அதானி இந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ளார்.