அரசு பள்ளி கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பள்ளி கட்டிடத்தில் உட்புறம் இருக்கும் கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகளும், மேல்புற பக்கவாட்டு சுவரின் சிமெண்ட் பூச்சுகளும் அடுத்தடுத்து பெயர்ந்து விழுந்தது. நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களுக்கு இதுவும் நடக்காமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்னர் சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.