Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2-வது நாளாக செல்லவில்லை…. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை…. கரை திரும்பும் மீனவர்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை தங்குத்தளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டு மரங்கள், 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக செல்கின்றனர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், கடலில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனால் மீன் பிடிக்க சென்ற ஏராளமான விசைப்படகுகள் கரை திரும்பி கொண்டிருக்கிறது. நேற்று 2-வது நாளாக வள்ளம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீன் பிடிக்க சென்ற 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று பாதியிலேயே கரை திரும்பின.

Categories

Tech |