Categories
அரசியல்

குழந்தைகள் தின விழா…. சைல்டு லைனின் ஸ்பெஷல் விழிப்புணர்வு….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது செய்தி குறிப்பில் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். அதாவது குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்தநாள் குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகின்றோம்.

குழந்தைகள் தான் இந்த நாட்டினுடைய ஒளிச்சுடர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள். அவர்களுடைய தனித்திறமைகளை கண்டறிந்து நாம் அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி உலகை அச்சமின்றி அணுகி கற்க துணை நிற்க வேண்டும். அவர்களை பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டும் முயற்சியாகும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் துன்புறுத்தல்களை நமது அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சைல்டு லைன் பொதுமக்களிடையே ஆண்டுதோறும் ஒரு வாரத்திற்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம். அதாவது ஒரு வாரத்திற்கு சைல்டு லைன் நண்பர்கள் வாரம் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த சைல்டு லைன் திட்டமிட்டுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியாக கருவலூர் பகுதியில் செயல்பட்டு வரும் சங்கரா சேவாலயம் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியதோடு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சைல்ட் லைன் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Categories

Tech |