திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம் 36வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதனை போல நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி அரசியலாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அண்ணாமலை கூறிய தகவல்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுகமாக எச்சரிக்கை என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. இதனால் திமுக- பாஜக என்ற நிலைபாட்டை தற்போது உருவாகிக்கொண்டது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிமுகவை ஒன்று படுத்தி பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க டெல்லி மேலிடம் வியூகம் வகுத்து வருகிறது.
இதில் இபிஸ்க்கு சுத்தமாக உடன்பாடு கிடையாது. அதிமுக கட்சியில் ஓபிஸ், சசிகலா, டிடிவிக்கு இடம் கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதம் காட்டி வருவதாகவே பாஜக அதிருப்தி அடைந்துள்ளது. பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகவில்லை என்றால் வேறு வழியை தான் கையாள வேண்டும் என்றால் பாஜக நினைத்தால் அதற்கு தலைவர்களை இழுப்பதும், சின்னத்தை முடக்குவதும் தான் ஒரே வழி. அதன்படி நேற்று அண்ணாமலை கூறிய சில வார்த்தைகள் அதிமுகவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை என்று கூறப்படுகிறது. நேற்று அண்ணாமலை கூறியது, திமுகவுடன் தேர்தல் களத்தை எதிர்த்து சந்திக்க பாஜக தயாராக உள்ளது. முக்கிய தலைவர்கள் சேர வேண்டும் என காத்துக்கொண்டிருப்ப தாக டெல்லி மேலிடத்துக்கு அழைப்புகள் வருகிறது. அதற்கான நேரம் வரும். மக்களவை தேர்தல் அதிகாரி உடன் கூட்டணி வைப்பதற்கு எங்கள் பாராளுமன்ற குழு பேசி முடிவு எடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இபிஎஸ் மீது அதிருப்தி அடைந்தவர்கள் இந்த லிஸ்டில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.