மேற்கு வங்க மாநிலத்தில் நாய் படத்துடன் வயதான நபருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாகர் (Sunil Karmakar) . 64 வயதான இவர், தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் (voter id) திருத்தம் செய்வதற்கு விண்ணப்பித்திருந்தார்.
அதன்படி அவருக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆனால் அந்த புதிய அட்டையை பார்த்து அதிர்ந்து போனார் சுனில். ஆம், அவருடைய புகைபடத்துக்கு பதிலாக ஒரு நாயின் படம் இருந்தது தான் அதிர்ச்சிக்கு காரணம்.
இதையடுத்து சுனில் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகாரளித்தார். அதை தொடர்ந்து அந்த அட்டையை வாங்கிக் கொண்ட அதிகாரிகள், நாய் படத்தை நீக்கிவிட்டு, வேறு அட்டையை அளிபதற்கு ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் திருத்தம் செய்யும்போது ஏற்பட்ட தவறால் இப்படி நடந்திருக்கலாம் என விளக்கமளித்துள்ளனர்.