Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. போலீசாரின் அறிவுரை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர செய்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். இதனையடுத்து கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளையே முடங்கினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, பொதுவாக கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மட்டுமே பனிமூட்டம் நிலவும். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் மிதமான வேகத்தில் வாகனங்களில் கவனமாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |