தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியையும் தொடங்கினார். அரசியல்வாதியும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த சனிக்கிழமை தன்னுடைய காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்றார். அப்போது அவருடைய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஓடும் காரில் வெளியில் தொங்கினர். அதோடு சில ஆதரவாளர்கள் இருசக்கர வாகனத்தில் பின்னால் சென்று கொண்டே வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பவன் கல்யாண் காரின் மேற்கூறையில் அமர்ந்தபடி சென்றபோது காரை வேகமாக ஓட்டியதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சிவகுமார் என்பவர் பவன்கல்யாண் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தெலுங்கு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jana Sena chief Pawan Kalyan travelled on car top to Ippatam village of Andhra Pradesh#JanasenaParty #Pawanakalyan #ippatamvillage #AndhraPradesh #Guntur pic.twitter.com/eCIFkWkUpd
— Arun Pruthvy Sandilya (@arunsandilya) November 5, 2022