Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 6 மாதத்தில் திடீர் சந்தேகம்…. கண்காணித்த கணவர்…. சுலோ பாய்சனை கையிலெடுத்த மனைவி….!!!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற பகுதியில் வசித்து வந்தவர் வடிவேல் முருகன். இவருக்கும் இறச்சகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சுஜாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் வடிவேலு அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது சுஜா தன்னுடைய முன்னாள் காதலனோடு சேர்ந்து தன்னுடைய கணவனான வடிவேலுக்கு மருந்து எதையோ கலந்து கொடுத்து வருகிறார் என்பது வடிவேலுக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வடிவேலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். இந்த நிலையில் வடிவேலுவுக்கு திடீரென்று உடல்நலகுறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |