வீடு இடிந்து விழுந்து முதியவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநெசலூர் மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தொடர் மழை காரணமாக முத்து கருப்பன் என்பவரது கூரை விட்டு சுவர் இடிந்து விழுந்தது.
இதனால் இடிபாடுகளில் சிக்கிய பெரியசாமிையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.