Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி!

நாமக்கல்லில் அமையவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது.

அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது. 5 கட்டங்களாக அடிக்கல் நாட்டும் பணிகளானது நடைபெறும் என கூறப்பட்டது.
முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட மக்களின் 30 ஆண்டு கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் அமையயவுள்ள மருத்துவக்கல்லூருக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரியானது அமையவுள்ளது ரூ. 338. 76 கோடி மதிப்பில் அரசு கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்றனர். முன்னதாக நாமக்கல் சேந்தமங்கலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

Categories

Tech |