Categories
மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்…‌ மக்கள் சிரமம்…!!!!!

சீர்காழி அருகே மழையால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வந்தது இதன் காரணமாக சீர்காழி அருகே இருக்கும் வெள்ளபள்ளம், திருக்கருக்காவூர், , குன்னம், காட்டூர், குமரகோட்டம், வேட்டங்குடி, பழையாறு சுனாமிநகர், திருமுல்லைவாசல், அரசூர், புளியந்துறை, வாலங்காடு, சிவக்கொல்லை, வேம்படி, வடகால், கீராநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது.

இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் கீழாநல்லூர் கிராமத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பள்ளிவாசலின் கோபுரத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்தது. சீர்காழி நகர பள்ளியில் இருக்கும் பள்ளி வளாகம் முழுமையாக மழை நீரால் சூழப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |