இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மாநிலங்களைவையில் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா என படிப்படியாக பரவி இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் கொரோனா குறித்த ஆய்வை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி,
மார்ச் 4 ஆம் தேதி வரை கணக்கிட்டதில் இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார். மேலும் கொரோனா குறித்தும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நானும் அமைச்சர்களும் நாள்தோறும் ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.