தோட்டக்கலை துறை சார்பாக சூரிய சக்தியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வட்டார தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சூரிய சக்தியின் பயன்பாடு குறித்தும் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமை தாங்கி தோட்டக்கலை துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து விவரித்தார்.
இதன்பின் தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் வேளாண்மையில் சூரிய ஒளி மின்சக்தியின் பயன்பாடு பற்றியும் வேளாண் பொறியியல் துறை மூலமாக வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் பேசினார். அந்த திட்டங்களானது சோலார் மின் வேலி அமைத்தல், சோலார் பம்ப் செட், சோலார் உலர்த்தி ஆகியவையின் பயன்பாடுகள் பற்றி செயல் விளக்கம் தந்தார். இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயிற்சியில் 50 விவசாயிகள் பங்கேற்றார்கள்.