சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயர்ப் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டது.
சேலத்தை அடுத்து ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகியது. இந்த பெரியார் பல்கலைக்கழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் 29 மேற்பட்ட துறைகள் இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து பெயர்ப் பலகைகளும் தமிழில் பெயர்பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலையே பெயர்கள் பொறிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பல்கலைக்கழகத்தின் முகப்புப்பகுதியில் உள்ள தமிழ் வாழ்க ! பெரியார் பல்கலைக்கழகம் என்று இருந்ததை நீக்கி ஆங்கிலத்தில் பெயர்கள் பொறிக்க பட்டுள்ளது. பெயர் பலகையில் இருந்த தமிழ் எழுத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பல்வேறு குற்றசாட்டுகள் இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் நிலையில் தற்போது தமிழ் பலகையை நீக்கி ஆங்கிலத்தில் பொறிக்கபட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்திருக்கிறது. இந்நிலையில் தமிழ் சமூக ஆர்வலர்கள் உடனடியாக தமிழ் பெயரிலையே திரும்ப வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.