நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளுக்கு இணையாக பூத் கமிட்டி அமைக்க திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியல் கட்சிகளுக்கும் பூத் கமிட்டி தான் வெற்றியை தீர்மானிக்கும். எனவே மாவட்ட செயலாளர்கள் வந்ததும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் எப்படி இருக்காங்க என்று கேட்ட ரஜினி அனைவரும் மக்கள் பணியை எப்படி செய்கிறீர்கள் , மக்களுக்கு பிரச்சனை ஏதும் என்றால் நீங்கள் முன்னால் போய் நிற்கிறீர்களா ? தண்ணி வரவில்லை , அடிப்படை வசதி இல்லை என்றால் மக்களோடு மக்களாக நினைக்கிறீர்களா ? என்று மாவட்ட செயலாளரிடம் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களான செங்கல்பட்டு , தென்காசி , திருப்பத்தூர் ஆகியவற்றிற்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.கட்சியை தமிழ் புத்தாண்டு அன்றைக்கு தொடங்கலாமா ? என்று ஆலோசித்து இருக்கின்றார். அதே போல கட்சிக்கென்று கொடி எப்படி இருக்க வேண்டும். மக்கள் மன்ற கொடி கலரிலே கட்சி கொடியையும் வடிவமைக்கலாமா ? என்ற ஆலோசனை மேற்கொள்ளபட்டது.
மேலும் சோசியல் மீடியாவில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஏராளமான விமர்சனங்ள் வருகின்றது. அதை எவ்வாறு எதிர் கொள்ளலாம் என்பது குறித்து மன்ற நிர்வாகிகள் கேட்டதற்கு அதை பற்றி நீங்கள் கவலை படாதீர்கள். அதை நான் பார்த்துக் கொள்கின்றேன். இங்கு அதற்கென்று தனி அணி இருக்கின்றது. நீங்கள் மக்கள் பணியை மட்டும் பாருங்கள் , உறுப்பினர் சேர்க்கையை உறுதிப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார் .இந்த ஆலோசனை மிக முக்கியதத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.