கயல் திரைப்படத்தில் நடித்து அனைவரது மனதையும் ஈர்த்தவர் நடிகை ஆனந்தி. இந்த திரைப்படத்திற்கு பின் அவரை அனைவரும் கயல் ஆனந்தி என்றுதான் அழைத்து வருகின்றனர். இப்போது அவர் யுகி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அதன் இசைவெளியீட்டு விழாவில் கயல் ஆனந்தி பேசும் போது தான் கர்ப்பமாக இருந்தது குறித்து கூறினார். அதாவது மேடையில் கயல் ஆனந்தி பேசியதாவது, “இந்த படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் இவற்றில் நடிக்கும்போது நான் நிஜத்திலேயே கர்பமாக இருந்தேன்” என அவர் கூறியிருக்கிறார்.
ஆகவே தற்போது கயல் குழந்தைக்கு அம்மா ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்தி, அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தில் நடித்த போது, அதில் துணை இயக்குனராக பணிபுரிந்த சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரைக்டர் நவீனின் உறவினர்தான் சாக்ரடீஸ் என்பது கவனிக்கத்தக்கது. முன்னதாக அவர் கர்ப்பமாக உள்ளதால், வளைகாப்பு நடக்கபோகிறது என்று சென்ற ஆண்டே தகவல் வெளியாகியது. எனினும் அதனை உறுதிசெய்ய புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இப்போது அவரே மேடையில் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை உறுதிசெய்து இருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.