மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (32). இவர் ஒரு பிரபலமான டிவி நடிகை ஆவார். இவர் துஜ்யத் ஜீவ ரங்களா, தக்கஞ்சா ராஜா ஜோதிபா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் சாங்லி கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹாலோண்டி சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று கல்யாணியின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கல்யாணி பலத்த காயமடைந்தார். இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு கல்யாணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கல்யாணியின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கல்யாணி உயிரிழந்த சம்பவம் அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.