கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 112 வீடுகள் இடிந்து சேதமானது. இந்நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 2 கன்று குட்டிகள், 2 பசு மாடுகள, 5 ஆடுகள் என 9 கால்நடைகள் பலியாகி, 16 மின்கம்பங்கள் சேதமானது. நேற்று முன்தினம் நடைபெற்ற கணக்கெடுப்பு படி 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Categories