Categories
மாநில செய்திகள்

பிரியங்கா காந்தி கதறி அழுதாங்க…. நான் தப்பு பண்ணல…. ஆனா தூக்கு தண்டனை கைதி மாதிரி நடத்துனாங்க….. நளினி உருக்கம்….!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான6 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த நளினி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மத்திய மாநில அரசுகளுக்கும் எங்கள் மீது அன்பு செலுத்திய தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றிகள். நான் சிறையில் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தின் நினைவில் தான் இருந்தேன். இந்த வழக்கில் கைதான நாளிலிருந்து ‌ எப்படியாவது வெளிவந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். சிறையில் இருந்து வெளியே சென்று விடுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்த எனக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் பலமுறை சிறையிலேயே என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். முதல்வரை சந்திக்க நினைத்தால் கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன். நான் சிறையில் இருக்கும் போது பிரியங்கா காந்தி என்னை சந்தித்தார். அப்போது அவருடைய தந்தையின் இறப்பு குறித்து மனம் விட்டு பேசி கண் கலங்கினார். நான் சம்பவ இடத்தில் இருந்தேன் என்று கூறி தான் என்னை கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட முதல் நாளிலிருந்து என்னை ஒரு தூக்கு தண்டனை கைதி போன்று நடத்தினார்கள். எனக்கு சிறையில் மருத்துவர்கள் பிரசவம் பார்க்க முடியாது என்று கூறிய பிறகு என்னுடைய சிறை கதவை திறந்தார்கள். ராஜீவ் காந்தியின் இறப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தான்.

ஆனால் நான் சம்பவ இடத்தில் இல்லை. அன்று உயிரிழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 32 வருடங்கள் சிறையில் இருந்த போது பல பாடங்களை கற்றுக் கொண்டேன். நான் 6 வருடங்கள் உயர்கல்வி படிப்பை படித்ததோடு கைவினை தொழில்களையும் கற்றுக் கொண்டேன். நான் சிறையில் இருந்த போது ஒரு மாதம் எனக்கு பரோல் வழங்கிய முதல்வருக்கு நன்றி. அகதிகள் முகாமில் இருந்து என்னுடைய கணவரை மீட்டெடுக்க எனக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். எங்களை பார்ப்பதற்கு மகள் ஆர்வமாக இருக்கிறார். மேலும் விசா கிடைத்தால் கண்டிப்பாக நான் அவளை சென்று சந்திப்பேன் என்று கூறியுள்ளார் ‌

Categories

Tech |