Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்!….. அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்… வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், கான்பூர் ஆகிய பல்வேறு நகரங்களில் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் பரவல் அதிகரித்து வருகிறது. இது குறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவர் அதிகாரி நானக் ஷரண் கூறியது, ‘மாவட்டத்தில் டெங்கு ஆய்வு செய்வதற்காக பல பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் டெங்கு பாதிப்புகளை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த சனிக்கிழமை உயர்மட்ட சீராய்வு கூட்டம் நடத்தி மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து லகிம்பூர் கேரி மாவட்டத்தில் பல பகுதிகளில் டெங்குவால் பலர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களில் டெங்கு கடுமையாக பாதித்த 9 நோயாளிகள் மாவட்ட மருத்துவமனையின் டெங்கு வார்டில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும் உயிரிழப்பு எதுவும் இல்லை. மேலும் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார பணியாளர்கள் குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கான்பூரில் டெங்கு வார்டில் சிகிச்சைக்கு சேர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது பற்றி அரசு மருத்துவமனை டாக்டர் ஷைலேஷ் குமார் சிங் கூறியது, “தினசரி 60 முதல் 70 பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சேருகின்றனர். அவர்களில் டெங்கு பாதிப்பு உறுதியானவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 6 பெரியவர்கள் மற்றும் 7 குழந்தைகள் என 13 பேர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |