Categories
தேசிய செய்திகள்

யோகா குரு பாபா ராம் தேவ் நிறுவனம்: 5 மருந்துப் பொருட்கள் மீதான தடை நீக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

யோகா குருபாபா ராம் தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தினுடைய 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை உத்தரகாண்ட் மாநில ஆயுா் வேதம் மற்றும் யுனானிஉரிம ஆணையமானது நீக்கி உள்ளது. முன்பாக பாபா ராம்தேவ் நிறுவனத்தின் சா்க்கரைநோய் மருந்து, ரத்த அழுத்த மருந்து, தைராய்டு சுரப்பு வீக்கத்துக்கான மருந்து, கண் நீா்அழுத்த மருந்து, உயா்கொழுப்புக்கு எதிரான மருந்து போன்றவற்றின் தயாரிப்பு, விற்பனைக்கு சென்ற 9ம் தேதி தடைவிதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சோ்ந்த மருத்துவா் கே.வி.பாபு என்பவா் இந்த மருந்துகளுக்கு எதிராக புகாரளித்தாா்.

அவற்றில் மருந்துகளை அற்புத நிவாரணிகள் என கூறி விளம்பரப்படுத்துவதை தடைசெய்யும் சட்டத்துக்கு எதிராக பாபா ராம் தேவின் நிறுவனம் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தாா். இதுகுறித்த புகாா் பாபா ராம் தேவின் மருந்து தயாரிப்பு நிறுவனம் இயங்கிவரும் உத்தரகாண்ட் மாநிலம் ஆயுா் வேதம் மற்றும் யுனானி உரிம ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதை பரிசீலித்த ஆணையம் மேற்கண்ட 5 மருந்துகளின் தயாரிப்பை நிறுத்தும்படி தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்த ஆணையம், அவற்றில் தவறு இருப்பதாகவும் அவசரகதியில் தடைமுடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லி அதனை திரும்பப்பெறுவதாக அறிவித்தது. தடைவிதிக்கப்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |