Categories
மாநில செய்திகள்

கனமழை!…. தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்…. ஏக்கருக்கு ‌ரூ. 30,000 நிவாரணம்…. திமுக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை…..!!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்‌ ஒன்றரை லட்சம் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதன் பிறகு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இதில் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதனையடுத்து சீர்காழி மற்றும் பூம்புகார் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்ததால் அப்பகுதிகள் தனி தீவாக காட்சி அளிக்கிறது. குறிஞ்சிப்பாடி மற்றும் சிதம்பரம் பகுதிகளில் மட்டும் சுமார் 6000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. அதன் பிறகு நெல்லுடன் சேர்த்து வாழை, நிலக்கடலை மற்றும் காய்கறி போன்ற பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.‌ இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் அதை யாருமே நேரில் சென்று பார்க்கவில்லை.

எனவே அதிகாரிகளை நேரில் சென்று அனுப்பி பாதிப்புகளை கணக்கீடு செய்து உரிய முறையில் ‌விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என இந்த விடியோ திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன். அதோடு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை இம்மாதம் வரை நீடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இந்த காப்பீட்டு திட்டத்தில் இந்த வருடத்திற்கான ப்ரீமியம் தொகையை விவசாயிகளின் சார்பில் அரசை எதிர்த்து செலுத்த வேண்டும். மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று விடியா திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |