தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் ரஜினி நடிக்க இருக்கிறார். அதன்பிறகு ரஜினிகாந்த் ஒரு நடிகராக மட்டுமின்றி பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவரும் அவருடைய நெருங்கிய நண்பருமான சுதாகர் என்பவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறாராம். இவருடைய புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காகும் மொத்த செலவையும் ரஜினி ஏற்றுக்கொண்டு செலவு செய்து வருகிறாராம். இந்த தகவலை சுதாகர் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய ரசிகருக்கு ரஜினிகாந்த் உதவி செய்வதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் ரஜினியை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.