இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் தற்போது சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்காக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள நிலையில், 12 வயது வரை உள்ள குழந்தைகள் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் முடிவு காலம் 25 வயது ஆகும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச பிரீமியம் தொகை 1 லட்ச ரூபாயாக இருக்கும் பட்சத்தில் உச்சவரம்பு எதுவும் கிடையாது.
இதன் சிறப்பம்சமாக மணி பேக் தவணையும் இருக்கிறது. இந்த சிறப்பம்சத்தின் படி பாலிசி தரர்களுக்கு 18, 20, மற்றும் 22 வயது நிரம்பியவுடன் காப்பீடு தொகையிலிருந்து 20% மணி பேக்காக வழங்கப்படும். அதன்பின் மீதமுள்ள அடிப்படை காப்பீட்டு தொகை முதிர்வு பலனாக பிரீமியம் தொகையின் 46 சதவீதம் மற்றும் போனஸ் வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் குறித்த முழு தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அருகில் உள்ள எல்ஐசி கிளையை அணுகலாம்