Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“நீங்கள் தகுதியானவர்கள்”…. சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்தை வாழ்த்திய கிங் கோலி..!!

சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு இந்திய அணியின் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் நேற்றோடு முடிந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதன் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குதகுதி பெற்றது. இதையடுத்து முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

 

இந்நிலையில் நேற்று கோப்பையை வெல்வது யார் என்ற இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான  இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரன் அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

சாம்பியன் பட்டம் வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் உலக கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர்கள்” என்று தெரிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |