Categories
மாநில செய்திகள்

100-வது பிறந்த நாளை கொண்டாடும் தாய் மாமா….. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கில் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். அதன் பிறகு கனமழையின் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர், பூம்புகார் ஆகிய பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்வதோடு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளையும் வழங்குகிறார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் தாய்மாமாவான தட்சிணாமூர்த்தி 100-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு அவரிடம் ஆசியும் பெற்றுள்ளார். மேலும் தட்சிணாமூர்த்தி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோவில் திருமாளம் என்ற பகுதியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |