Categories
பல்சுவை

வாடகை வீட்டை சொந்தமாக்கலாம்…. எப்படின்னு தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்….!!!!

வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு சில சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வாடகைதாரர்கள் பல பேரும் அவர்களுக்கான சட்டங்கள் பற்றி முழுவதும் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பு கிடையாது. வாடகைவீட்டில் நீண்ட காலத்துக்கு வசித்தால் வாடகைதாரருக்கே அவ்வீடு சொந்தம் என்ற விஷயத்தை நாம் கேள்விப்பட்டு இருப்போம். எனினும் அதன் உண்மை நிலை பற்றி கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்கமாட்டோம். அதவது சுமார் 12 வருடங்கள் வாடகை எதுவுமே செலுத்தாமல் ஒரு வீட்டில் நீங்கள் வசித்துவரும் சூழ்நிலையில், அந்த வீட்டை சொந்தமாக்க உரிமைகோரலாம். ஆனால் மாதந்தோறும் வாடகை கொடுத்து குடியிருப்பவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வீட்டை உரிமைகோர இயலாது.

மேலும் வீட்டுக்கு நாம் அட்வான்ஸ் பணம் கொடுப்பதிலும் சில சட்டங்கள் இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு வீட்டினுடைய உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை வாடகைதாரரிடமிருந்து முன் பணமாக பெறுகின்றனர். எனினும் சட்டப்படி ஒரு மாதத்திற்கான வாடகை தொகைதான் முன் பணமாக வசூலிக்க வேண்டும். வீட்டு வாடகை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் திடீரென வாடகையை அதிகரித்தால் வாடகைதாரர் நீதிமன்றத்தில் முறையிடலாம். இதேபோன்று வீட்டில் சரியான தண்ணீர்வசதி, மின்சாரவசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளில் குறைபாடு இருந்தாலோ (அ) வசதி நிறுத்தப்பட்டாலோ (அ) காரணமே இன்றி வீட்டின் உரிமையாளர் வீட்டை காலிசெய்ய சொன்னாலோ வாடகைதாரர்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டு உரிமையாளரிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையை பெறலாம்.

Categories

Tech |