பிரபல நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
பிரபல நாடான ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அதேபோல் இன்று மதியம் 1.39 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. டோக்கியோவுக்கு வடக்கே உள்ள இபராக்கி மாகாணங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும் கடுமையான நிலை அதிர்வை உணர்ந்துள்ளது. இதனால் ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.