Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, அதற்குரிய நிவாரணங்களையும்  அறிவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம் பாடி பகுதிக்கு  நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் முறையாக கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

Categories

Tech |