ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 12 வயது சிறுமி வேலை செய்ததற்கு கூலி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறி கொன்று துண்டாக ஷாலு டோப்னா(26) என்ற குற்றவாளி வெட்டி உள்ளார். அதன் பிறகு அவர் தலைமறைவாகியுள்ளார். இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50000 பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இவரைப் பற்றி துப்பு கிடைத்த அங்கு செல்வதற்கு குற்றவாளி தனது வசிப்பதத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். கடந்த நான்கு மாதங்கள் முன்பு அவர் இருக்கும் இடம் குறித்த தகவல் கிடைத்தது. தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறை என இறுதியாக டோப்னாவை கைது செய்தனர். தலைமறைமாக இருந்த இந்த குற்றவாளியை பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குற்றவாளிடம் நடத்திய சோதனையில், ஜார்கண்ட் மற்றும் பீகாரை சேர்ந்த பெண்களை வீட்டு வேலைக்கு அழைத்து வந்து விடும் ஏஜென்சில் பணியாற்றியதாகவும், கமிஷன் அடிப்படையில் அவ்வாறு பெண்களை அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு அழைத்து வந்ததாகவும், 3 ஆண்டுகளுக்கு பின் தனது கூலி ரூ.2 லட்சத்தை கொடுக்குமாறு தன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று சிறுமி கூறினார். இதனையடுத்து டோப்னோ சிறுமியை கொன்று சிறு சிறு துண்டுகளாக வெட்டி கழிவு நீர் கால்வாயில் வீசியது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.