பிரபல கொலை வழக்கு வரும் வியாழன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள தில்லை நகரில் பிரபல தொழிலதிபரான ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கொலை செய்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது. மேலும் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு 13 பேரிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்தது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சத்யராஜ், லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் ஆகியோர் இந்த சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் சண்முகம் என்பவர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து இந்த வழக்கு வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.