Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா -மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்

மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில்  இறுதிப்போட்டிக்கு  இந்திய அணி முதன்முறையாக முன்னேறி உள்ளது. 

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆரம்பம் முதலே இந்திய அணி வெற்றி வாகை சூடி வருகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோத இருந்த போது இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இதனால் குரூப் ஏ பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குரூப் பி பிரிவில் 2 இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறி உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி முதன்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. மேலும் இன்று நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும்  அணிகள் தென்னாப்பிரிக்கா மோதுகின்றன.

இந்த போட்டியும் மழையினால் கைவிடப்படும் பட்சத்தில் குரூப் 2 பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிபோட்டி வரும் மார்ச் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள விராட் கோலி, இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |