தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்த பரத் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதனையடுத்து பரத் நடிப்பில் காளிதாஸ் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதைத்தொடர்ந்து பரத் நடிப்பில் அண்மையில் வெளியான மிரள் திரைப்படம் திரில்லர் கதை அம்சத்தில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இவர் கடந்த 2013-ம் ஆண்டு Jeshley என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பரத் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படமானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நடிகர் பரத்தின் மகன்கள் நல்லா வளர்ந்து விட்டார்களே என்று கூறி வருகிறார்கள்.