Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை திருட்டில் சிக்கிய அட்லி”…. பேரரசு படத்தின் காப்பி தான் ஜவான் படமா….? பட அதிபர் சங்கம் தீவிர விசாரணை….!!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த அட்லி அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். அதோடு நடிகர் விஜய் சிறப்பு வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜவான் திரைப் படத்தின் கதை தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு திரைப்படத்தின் கதை என இணையதளத்தில் தகவல்கள் தீயாக பரவியது. இதன் காரணமாக பட அதிபர் மாணிக்கம் நாராயணன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் படி தயாரிப்பாளர் சங்கத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது உண்மை நிலவரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதன் பிறகு பேரரசு திரைப்படத்தை காஜாமொய்தீன் என்பவர் தயாரித்திருந்தார்.

தற்போது படத்தின் வெளியீட்டு உரிமை காஜா மொய்தீனிடம் இருக்கிறதா அல்லது மாணிக்கம் நாராயணண்டம் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இதனையடுத்து பேரரசு படத்தின் கதைதானா என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஜவான் படத்தை பார்த்த பிறகு தான் உண்மையான நிலவரம் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.‌

Categories

Tech |