பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலிப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். ஆனால் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகு ஹிந்தி சினிமாவில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யா ராய் கவனம் செலுத்தினார். இவருக்கு ஆராதியா என்ற ஒரு மகளும் இருக்கிறார். அதன் பிறகு சமீபத்தில் ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நந்தினி வேடத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு குரு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தை மணிரத்தினம் இயக்க ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் குரு திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த நன்னாரே நன்னாரே என்ற பாடல் 90’s கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த பாடல் ஏ.ஆர் ரகுமான் இசை அமைப்பில் வெளியாகியிருந்தது.
இந்த பாடல் 2007-ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது எதற்காக இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறித்து தானே யோசிக்கிறீர்கள். அதாவது என்னுடைய பக்கத்து வீட்டு அக்கா விடை கொடு சாமி என்ற பாட்டை whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடி போய்விட்டார் என்று அதில் இருக்கிறது. இப்ப எங்க ஏரியாவே ரொம்ப மஜாவா இருக்கு என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடல் ஒருவரின் மீம்ஸ் கிரியேட்டரால் தற்போது instagram, ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram